திங்கள், 30 ஜனவரி, 2012

பசுபதிபாண்டியன் கொலை வழக்கு: மேலும் இருவர் சரண்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்த பசுபதிபாண்டியன், கடந்த 10-ந்தேதியன்று இரவு, திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் உள்ள தனது வீட்டின் அருகில் படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 4 தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
கடந்த 12-ந்தேதியன்று நெல்லை மாவட்டம் இடையர்தவணையை சேர்ந்த ஆறுமுகச்சாமி, தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காட்டை சேர்ந்த அருளானந்தம் ஆகியோர் வள்ளியூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ராஜபாளையம் அருகேயுள்ள மூகவூர் பூம்பழ அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் என்ற புறா மாடசாமி, மற்றும் பிரபு. இருவரும் சரணமடைந்தனர்.
இவர்களை கோவைமத்திய சிறையில் அடைக்க மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்  உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக