தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் இன்று சங்கரன்கோவிலில் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சங்கரன் கோவிலுக்கு வந்தார். இதையடுத்து தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை எழுதிக்கொடுத்தனர். ரகசிய கருத்து கேட்பு முடிவின்படி தனித்துப்போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்று முடிவெடுத்து அறிவிக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ஜான்பாண்டியனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து பேசிய ஜான்பாண்டியன், ‘’நீங்கள் என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டீர்கள். நீங்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் நல்ல முடிவினை மேற்கொள்வேன்’’ என்றார். ஆனால், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களோ திமுகவிற்கே ஆதரவு கொடுப்பதற்கே வாய்ப்புகள் இருக்கலாம் என்று சூசகமாக தெரிவித்தனர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக