சனி, 3 மார்ச், 2012

சங்கரன்கோயில் இடைத்தேர்தல்: முதல்வரை சந்தித்தப்பின் கிருஷ்ணசாமி பேட்டி

1/1
சென்னை, மார்ச்.- 3 - சங்கரன் கோயில் சட்டபேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சென்னையில் நேற்று தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவைஇன்று (நேற்று) அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன் அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, வேட்பாளருக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவுஅளிக்கிறது என்பதை அவரிடத்திலே கூறினேன். முன்னதாக பரமக்குடி துப்பாக்கி சம்பவம்சம்மந்தமாக எங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துரைத்தோம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதிஅளித்துள்ளார். இதையடுத்து எங்கள் கட்சி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் நிருபர்கள்கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக முன்பு அறிவித்தீர்களே.? பதில்:அன்று இருந்த சூழ்நிலையில் அந்த முடிவை மேற்கொண்டோம் தற்போது சங்கரன்கோவில் அ.தி.மு.க. தேர்தல் பணி குழுவில் எங்களை இணைத்துகொண்டு புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவார்கள், இவ்வாறு டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக