செவ்வாய், 20 மார்ச், 2012

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் ஜான்பாண்டியன் பேட்டி



பதிவு செய்த நேரம்:2012-03-15 10:43:23தஞ்சை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அங்கு அதிமுக குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழகத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டுக்கு காரணம் மத்திய அரசுதான். மத்திய தொகுப்பிலிருந்து தான் கூடுதலான மின்சாரம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
5 பேர் பரமக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்டது தமிழக முதல்வருக்கு தெரிந்து நடந்ததா? இல்லை. இது அதிகாரிகள் திட்டமிட்டு செய்த படுகொலைகள். சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொள்கின்றனர். சென்னையில் கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றது தவறு. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அவர்களை கொன்றது நியாயமில்லை.
இலங்கையில் தமிழர்களை அழித்த ராஜபக்ஷேவை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அமெரிக்கா ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிக்க கோரி தமிழக கட்சிகள் ஓரணியில் நின்று மத்திய அரசை வலியுறுத்தியும் மத்திய அரசு மவுனம் சாதிப்பது கண்டிக்கதக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக