வெள்ளி, 22 ஜூன், 2012

பரமக்குடி சம்பவம்! ராமநாதபுரத்தில் கண்டன ஊர்வலம்! ஜான் பாண்டியன் எச்சரிக்கை!





பரமக்குடி கலவரம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் ராமநாதபுரத்தில் பெரிய அளவில் கண்டன ஊர்வலம் நடத்துவேன் என்றார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய ஜான்பாண்டியன், தென்மண்டல ஐஜி ராஜேஸ் தாஸ், அப்போதைய ஐஜி சந்தீப் மிட்டல் உள்ளிட்ட பல்வேறு காவல் துறை உயரதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் காவல் உயரதிகாரிகளை அரசு காப்பாற்றுகிறது என்று கூறிய அவர், சிபிஐ விசாரணையில் நேர்மையாக நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறு சிபிஐ பாரபட்சம் காட்டினால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரமாண்டமாக கண்டன ஊர்வலம் நடத்துவேன்; தமிழக அரசு இமானுவேல் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்; பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை, விரைவில் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக