செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

மதுரையில் பதற்றம்: அம்பேத்கர், இமானுவேல் சிலைகள் விஷமிகளால் உடைப்பு




அவனியாபுரம்: மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே டா‌க்ட‌ர் அ‌ம்பே‌‌த்க‌ர் ‌சிலை‌யு‌ம், இமானுவே‌ல் சேகர‌ன் ‌சிலை‌யி‌ல் உடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் அ‌ங்கு பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. இதனா‌‌ல் நூ‌ற்று‌க்கண‌க்கான போ‌லீசா‌ர் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அவ‌னியாபுர‌ம் அருகே பெருங்குடியில் விமான நிலையம் செல்லும் வழியில் உ‌‌ள்ள அம்பேத்கார் சிலையை நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி உள்ளனர். அதேபோல பெருங்குடி அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள இமானுவேல்சேகரன், அம்பேத்கர் சிலைகளையும் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி விட்டு தப்பி விட்டனர்.

இர‌ண்டு இடங்களில் அம்பேத்கர் சிலை, இமானுவேல்சேகரன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இ‌ந்த ச‌ம்பவ‌ம் அவனியாபுரம், பெருங்குடி, சுற்று வட்டார பகுதிகளில் காட்டு தீ போல பரவியது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் ‌தலைவ‌ர்க‌ளி‌ன் ‌சிலைகளை சேத‌ப்படு‌த்‌தியவ‌ர்களை உடனடியாக கைது செ‌ய்ய‌க் கோ‌ரி விடுதலை சிறுத்தை கட்சி‌யி‌ல் பெருங்குடி ரிங் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, சாத்தூர், விருதுநகர் ஆகிய ஊர்களில் இருந்து மதுரைக்கு வரும் பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பல கிலோ மீட்டர் தூரம் நீண்டவரிசையில் நிறுத்தப்பட்டதா‌ல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

அதேபோல சின்ன உடைப்பு கிராமத்திலும் 500-கும் மேற்பட்ட பொதுமக்கள் சிலை உடைப்பு சம்பவத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனா‌ல் மதுரையில் இருந்து அவனியாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.

சிலை உடைப்பு மற்றும் பஸ் மறியல் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வரு‌கி‌ன்றன‌ர்.

போராட்டக்காரர்கள் நடுரோட்டில் முட்கள், மரங்களை போட்டு தடை ஏற்படுத்தி உள்ளனர். சாலை மறியலில் ஈடுபடும் பொதுமக்களால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக