ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இமானுவேல்சேகரன் நினைவு தினம் 2,500 போலீசார் மதுரையில் பாதுகாப்பு


 தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை  முன்னிட்டு மதுரை நகர், புறநகர் பகுதிகளில் 2500 போலீசார் பல த்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ம் தேதியான இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்  பரமக்குடியில் அனுசரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இமானுவே ல்சேகரன் நினைவு தினம் பரமக்குடியில் அனுசரிக்கப்பட்ட போது  பயங்கர கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தை அடக்க து ப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
எனவே இவ்வாண்டு இமானுவேல்சேகரன் நினைவு தின நாளில்  கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும்,  செப்.19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று மதுரை நகர் மற்றும்  புறநகரில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும்  மதுரை வந்த சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். அப்போது மதுரை, ராமநாதபுரம்  உள்ளிட்ட தென் மாவட்டங்கள் முழுவதும் போலீஸ் பாதுகாப்பை  பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மதுரை நகர், புறநகரில் நேற்று முதல் பலத்த பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 ஆயிரத்து  500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். புறநகரில் 24  இடங்களில் சோதனை அறை அமைக்கப்பட்டுள்ளன. அந்த  இடங்களில் மைக், கேமரா அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மதுரை  வழியாக தென் மாவட்டங்களுக்கு வந்து, செல்லும் வாகனங்களின்  எண்கள் கண்காணிக்கப்படுகின்றன. இதே போல், நகர், புறநகர்  பகுதிகளில் உள்ள சிலைகள் முன்பும் போலீசார் பெருமளவில் கு விக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக