ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

அம்பேத்கர் சிலை சேதம்: கும்பகோணம் அருகே பரபரப்பு




கும்பகோணம் அருகே உள்ளது சோழபுரம். சோழபுரம் கடைவீதியில் அம்பேத்கர் மற்றும் பெரியார் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 15.09.2012 அன்று நள்ளிரவில் அம்பேத்கர் சிலையின் தலை பகுதி சேதம் அடைந்துள்ளது. இச்செய-ல் ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், திமுக உள்ளிட்ட கட்சிகள் பந்தநல்லூர், திருப்பனந்தாள், சோழபுரம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய பகுதிகளில் கடைகளை அடைக்கச்சொல்லி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக