வியாழன், 11 அக்டோபர், 2012

பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்து தீரத்துடன் போராடிய இமானுவேல் சேகரன்


            சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் - 1924 அக்டோபர் 9 ஆம் தேதி, முகவை மாவட்டம் செல்லூரில் வேதநாயகம் என்ற ஆசிரியருக்கு மகனாக பிறந்த அவர்பள்ளி இறுதி வகுப்பை முடித்து சில ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஊர் திரும்பினார்: தென்மாவட்டங்களில்பார்ப்பனியத்தில் ஊறிப்போய்சாதி ஆதிக்க வாதிகள்தேவேந்திரர்கள் மீது ஏராளமான சாதி அடிமைக் கட்டளைகளைப் பிறப்பித்திருந்த காலம் அது;
      அன்று முகவை மாவட்டங்களில் சாதி ஆதிக்க சக்திகள் முத்துராமலிங்க தேவர் தலைமையில் அணிதிரண்டு நின்றனர். முத்துராமலிங்க தேவர் பார்வர்டு பிளாக் கட்சியின் முக்கிய தலைவர்; அவரை எதிர்த்து, பச்சைத் தமிழர் காமராசர் வழி நடத்திய காங்கிரஸ் கட்சிக்குள் தன்னை இணைத்துக்கொண்டுபார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகளை எதிர்த்து தீரத்துடன் போராடினார் இமானுவேல் சேகரன்.
      மறவர் சமூகம்தேவேந்திரர் மக்கள் மீது திணித்த அடிமைக் கட்டளைகளை இமானுவேல் சேகர் தலைமையில் திரண்ட மக்கள் ஏற்க மறுத்தனர்; தேனீர்க்கடைகளில்இரட்டை டம்ளர்இருக்கையில் அமரத் தடை போன்றஅவங்களைநேருக்கு நேர் எதிர்த்துப் போராடினார் இமானுவேல் சேகரன்.
       1957 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிபுத்தூர்முதுகுளத்தூர் தேர்தல்களில் முத்துராமலிங்க தேவரை எதிர்த்துஇமானுவேல் சேகரன்காங்கிரஸ் கட்சிக்காகமக்களை அணி திரட்டியதால் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்க தேவரின் சாதி ஆதரவாளர்கள் கலவரத்தைத் தொடங்கினர்இமானுவேல் சேகரன் தலைமையில் திரண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் துணிவோடு எதிர்த்து நின்றனர்.
      முத்துராமலிங்க தேவர்இமானுவேல் சேகர் ஆகிய இரு தரப்பினரையும் அழைத்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், முதுகுளத்தூர் தாலுக்காஅலுவலகத்தில் சமரசப் பேச்சு நடத்தினார். ஆங்கிலம், ரஷ்ய மொழி உட்பட 7 மொழிகள் அறிந்தவர் இமானுவேல் சேகரன்; தமது மக்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ணித்தரமாக மறுத்தார் இமானுவேல்; ஆங்கிலப் புலமை மிக்க முத்துராமலிங்க தேவர் ஆங்கிலத்தில் பேசிய போது அவருக்கு அதே மொழியில் பதிலளித்தார் இமானுவேல்; தங்களுக்கு சமமாகஒரே இடத்தில் ஒன்றாக திரண்டுசமநிலையில் வாதாடும் நிலைக்கு ஒடுக்கப்பட்ட சமூகம் அணிதிரண்டு வாதாடியதை ஆதிக்க சாதியினரால் ஏற்க முடியவில்லை. இந்த சமரசப் பேச்சுக் கூட்டம் நடந்த நாள் - 1957 செப்டம்பர் 10:
     அடுத்த நாள் செப்டம்பர் 11 ஆம் தேதி பரமக்குடியில்தனது இல்லத்தின் அருகேஇரவு 8-30 மணியளவில் இமானுவேல் சேகரன் வெட்டி கொலை செய்யப்பட்டார்; அப்போது அவருடைய வயது 33.
      முதுகுளத்தூரில் பெரும் கலவரம் வெடித்தது ; அக்கால கட்டத்தில்முத்துராமலிங்க தேவரின் பின்னால்வலிமையான சாதி ஆதிக்க வாதிகள் இருந்த நிலையில்எந்த ஒரு கட்சியும்ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தினருக்கு குரல் கொடுக்க தயாராக இல்லை.
       பெரியாரும்விடுதலைநாளேடும் மட்டும் தான்உறுதியாகசாதி ஆதிக்க சக்திகளை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது. கலவரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளை அரசு கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று காமராசர் ஆட்சிக்கு வேண்டுகோள் விடுத்த பெரியார்,  இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று அறிக்கை விடுத்தார்: காந்தியாரின் கொள்கையில் தீவிரப் பற்றுக் கொண்டவரும்முக்குலத்தோர் சாதியில் பிறந்தவருமான தினகரன் என்ற பத்திரிக்கையாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகசுயசாதி எதிர்ப்பாளராக மாறிதனது பத்திரிகையில் எழுதியதால்அவரது அலுவலகத்தை சூறையாடி அவரது சொந்த சாதியினரே, அவரைப் படுகொலை செய்தனர். சுயசாதி மறுப்பாளராக தீரத்துடன் போராடிய தோழர் தினகரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் !
     சாதி ஒழிப்புப் போராளி இமானுவேல் சேகரன் வரலாறுகள்சாதி ஒழிப்புப் போரில் களத்தில் நிற்கும் போராளிகளூக்குவழிகாட்டும் ஒளி விளக்கு ! பெரியார் தடம் பதித்தவரலாற்றுச் சுவடுகளில் தொடர்ந்து போராட, மாவீரன் இமானுவேல் சேகரன் நினைவு நாளில் – “திராவிடர் விடுதலைக் கழகம்உறுதி ஏற்கிறது !
                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக