திங்கள், 31 டிசம்பர், 2012

கட்டபொம்மன் வாரிசுகளுக்கான நிலத்தை "மாஜி' எம்.எல்.ஏ., அபகரித்ததாக டாக்டர்.கிருஷ்ணசாமி புகார்

சென்னை: கட்டபொம்மன் வாரிசுகளுக்கு, அரசு அளித்த நிலங்களை, அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., அபகரித்துள்ளார், என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: ஒட்டபிடாரம் தொகுதிக்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சியில், கட்டபொம்மனின் வாரிசுகள், 120 பேருக்கு, தமிழக அரசு, 1970ல், தலா, 3 ஏக்கர் நிலம் அளித்தது. இந்த நிலத்திலிருந்து, பெரும்பகுதியினரை வெளியேற்றி, 200 ஏக்கர் நிலத்தை, அ.தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., மோகன் அபகரித்துள்ளார்.
அபகரித்த நிலத்திலிருந்து, கிரானைட், மணல், செம்மண் ஆகியவற்றை, சட்டவிரோதமாக எடுத்து விற்று வருகிறார். இதுகுறித்து, போலீஸ் மற்றும் முதல்வருக்கு புகார் செய்தேன்; சட்டசபையிலும், இப்பிரச்னையை எழுப்பினேன்.
இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசாருடன், பாஞ்சாலங்குறிச்சியில் ஆக்கிரமிப்பில் உள்ள, கட்டபொம்மன் வாரிசு நிலங்களை பார்வையிட, கடந்த இருநாள்களுக்கு முன் சென்றேன். அப்போது, மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்களை தடுத்ததோடு, போலீசார் முன்னிலையிலேயே, புதிய தமிழக கட்சியினரை தாக்கினர். இதில், கட்சியின் மாவட்ட செயலர் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகிறார். சுதந்திரப் போராட்ட வீரரின்வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை, ஆளும் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவரே அபகரித்து, கனிம வளங்களை கொள்ளையடித்து வருகிறார். அவருக்கு, போலீஸ் மற்றும் அதிகாரிகள் துணையாக உள்ளனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக