வியாழன், 13 டிசம்பர், 2012

நாங்களும் டி.வி. சேனல் ஆரம்பிக்கிறோம்: ஜான்பாண்டியன்





தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அக்கழகத்தின் நிறுவனர் பெ.ஜான்பாண்டியன்,
தமிழ் சாதிகளில் தேவேந்திரர் மற்றும் தேவர் சமூக மக்களிடையே ஏற்படும் சிறுசிறு மோதல்களை பெரிதாக்கி வெளியிடும் அரசியல் கட்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.
பட்டியல் சாதியில் இடம் பெற்றுள்ள பள்ளர், குடும்பன் காலடி, பன்னாடி, வாதிரியாளர், தேவேந்திரகுலத்தார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல மக்களை தேவேந்திரகுல வேளாளர் என ஒற்றை பெயரால் அறிவிக்க வேண்டும்.
கழகத்தின் தொண்டர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் அரசியல் கல்வியை கொண்டு செல்ல வேண்டியது கழகத்தின் கடமை என்பதால் கழகத்தின் சார்பில் மாத இதழ் நடத்துவது எனவும் தொலைக்காட்சி தொடங்குவது எனவும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் முடிவு எடுத்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக