தென்காசி கோயிலும், தென்பாண்டி வேந்தர்களும்
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலத்தின் அருகே பொதிகை மலையின்
அடிவாரத்தில் அமைந்துள்ளது தென்காசி. இங்கே பாண்டியர்களால் கட்டப்பட்ட
சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இக்கோயிலின் ஆய்வினூடாகவும் பள்ளகளே பாண்டியர் என்று அறிய முடிகிறது.
'காசி கலியன்' என்ற பெரும்புலவர் பாடிய பாக்கள் தென்காசி கோயிலில் கல்வெட்டுகளாக உள்ளன. அதில்....
"சீர்கொண்ட செங்கமலை வாழத் திரையாடைப்பார்கொண்ட வாள்வீர பாண்டியன் என்று - ஏர்கொண்டகானுலா மாலைக்கன குமகுடம்பு னைந்தான் மாணவே லானபிரா மன்" (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.80 )
அபிராம பாண்டியன் போருக்கு செல்கின்ற போது அவனது வாளையும், வெண்
கொற்றாக்குடையினையும் பாராட்டுகின்ற புலவர் ஏர்கொண்ட பாண்டியன் என
எடுத்துரைப்பது பாண்டியர்கள் பள்ளர்களே என்பதை உணர்த்துகின்றது.
பராக்கிரம பாண்டியன் மெய்க்கீர்த்தியில்
" சிவநெறி யோங்கச் சிவாற்சனை புரிந்துமருது ராற்கு மண்டப மமைத்து" (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.89 )
எனவரும் அடிகளில் மருதூரார்களான மள்ளர்கட்கு - பள்ளர்கட்கு மண்டபமமைத்த
செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.
பராக்கிரம பாண்டியன், குலசேகர பாண்டியன், அதிவீரராம பாண்டியன், வரதுகராம
பாண்டியன், வரகுணராமன், குலசேகரன்,வரகுணராம பாண்டியன் உள்ளிட்ட பல பாண்டிய
மன்னர்களில் பெயர்களைக் கல்வெட்டில் அறிய முடிகிறது.
கலியுக ஆண்டு 4558ன் மேல் கார்த்திகை மாதம் 5ஆம் நாள் (கி.பி. 1457 )
தென்காசிக் கோயிலில் பராக்கிரம பாண்டியன் கோபுரம் அமைக்கக் கால்கோளிட்ட
செய்தியைப் பாடலாக வடித்துத் தந்துள்ள கல்வெட்டில்,
"செந்நெல் வயல் தென்காசி நகரில்நற்காத்திகைத் திங்கள் தியதி ஐந்தில்........................................................திருக்கோபுரம் காணத் துடியிடையாய்உபான முதல் தொடங்கினானே" (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.31 )என்று தென்காசி நகர் செந்நெல் வயல் சூழ்ந்த செந்நெல் முதுகுரியினரான மள்ளர்களின் - பள்ளர்களின் ஊர் என்பது உணர்த்தப் படுகிறது.
கோபுரத்தை கட்டுகின்ற வேளையில் பராக்கிரம பாண்டியன் பகை அரசர்களின்
படையெடுப்பையும், உள்நாட்டுப் போர்களையும், கருவூலத்தில் போதிய பொருளின்றி
நிலைகுலைந்து போனதாலும் கோபுரத்தை அவனால் முழுமையாகக் கட்டி முடிக்க
முடியவில்லை.
இம்மன்னனுக்குப் பின்னர் ஆண்ட பொன்னின் பெருமாள் அழகன் குலசேகரன் சக
ஆண்டு 1518 இல் இக்கொபுறப் பணியை நிறைவு செய்தான். இவனுக்குப் பின்
கி.பி.16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிவீரராம பாண்டியன், கி.பி 1564 இல்
முடி சூடினான். இவனுக்குப் பின் கி.பி.1588 இல் துங்கராம பாண்டியன்
முடிசூடி அரசாண்டான். இவன் சிறந்தத் தமிழ் புலவனாகவும் திகழ்ந்தான்.
இவனுக்குப் பின்னர் கி.பி.1618 இல் வரகுணராம குலசேகரன் அரசுக் கட்டிலில்
அமர்ந்தான். அதனைக் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இம்மன்னனுக்குப் பின் கி.பி.1748 இல் வகோன்ராமப் பாண்டியனின் மகன்கள்
தங்களுக்குள் முரண்பாடு கொண்டு தென்காசி நகரில் கீழக் கோட்டையிலிருந்தும்,
மேலக் கோட்டையிலிருந்தும் ஆட்சி புரிந்தனர். இவர்களுக்குள் இருந்த பகையைப்
பயன்படுத்திக் கொண்ட வடுக வந்தேறிகள் இவர்களைச் சுரங்கப்ப் பாதை வழியாகச்
செல்ல வைத்து வஞ்சமுடன் கொன்று ஒழித்தனர்.
முகமதியர்கள் தென்காசியக் கைபற்றி ஆட்சி செய்த பின்னர் முழுமையாக
நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது தென்காசி. பாண்டியர்கள் வலிமை குன்றிய பின்
உரிமை முறை பற்றிய ஓலைச் சுவடிகளைக் கோயில் கோபுரத்தில் ஒளித்து வைத்தனர்.
இதனை அறிந்த வடுகர்கள் கோபுரத்தையே தீவைத்துக் கொளுத்தினர். கி.பி.1771 ஆம்
ஆண்டு தென்காசியில் பாண்டியர்களின் ஆவணங்கள் நெருப்பிற்கு இரையாக்கப்
பட்டு அழிக்கப்பட்டதாகத் திருநெல்வேலி வரலாற்றுக் குறிப்பு என்ற நூல்
கூறுகிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36 )
பிறிதொரு குறிப்பு 25 .03 .1814 ஆம் ஆண்டு தென்காசி கருவூலத்தைக்
கைப்பற்றும் வகையில் பாளையக்காரன் (நாயக்கன்) ஒருவனால் தீயிட்டுக்
கொளுத்தப்பட்டது என்கிறது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36 )
சென்கி என்ற மேலை நாட்டு கிருத்தவ போதகர் தனது கி.பி.1729 ஆம்
ஆண்டையக் குறிப்பேட்டில், தென்காசிக் கோபுரமும், அதன் மேலுள்ள கடிகாரமும்
நன்றாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார். அனால் கி.பி.1824 இல் நிலம்
அளக்கும் அளவர் குறிப்பில் தென்காசிக் கோபுரம் தீவைக்கப் பெற்று அழிந்து
பரிதாபமாகக் காட்சி தருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ச.கணபதிராமன் ,தென்காசி அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில் வரலாறு, பக்.36 )
இடியும், மின்னலும் கோபுரத்தைத் தாக்கி அழித்ததாகப் பின்னாளில்
கட்டுக் கதைகள் வடுகர்களாலும், வடுகர்களுக்கு வாலுருவும் ஒரு சில
புல்லுருவிகளாலும் புனையப் பட்டுக் கற்பிக்கப் பட்டன. உண்மைகளை உறங்கப்
போடலாம்,. ஒருபோதும் கொள்ள முடியாதல்லவா? மள்ளர் குல மாமன்னன் அரிகேசரி
பராக்கிரம பாண்டியனால் உருவாக்கப் பெற்ற கோபுரம், 'பாண்டியர் மரபினராகிய பள்ளர்களின் ஆட்சி' மீண்டும் இந்த மண்ணில் வந்து விடக் கூடாது என்னும் வடுகச் சூழ்ச்சியினால் சாம்பலாக்கப் பட்டது.
தென்காசி கோயிலில் தேரோட்டும் உரிமை நன்னகரம் பள்ளர்களுக்கு இருந்தது.
கால ஓட்டத்தில் இவ்வுரிமை மறுக்கப் பட்டு வழக்கொழிப்பு செய்யப் பட்டது.
நன்னகரத்தை சார்ந்த பள்ளர்குலத்தவரான சுடலைமாடன் மகன் இசக்கி முத்து
என்பவர் ஆண்டுதோறும் தென்காசி கோயிலுக்கு நாள்கதிர் கொண்டு செல்லும் வழமை
இன்றுவரை நடப்பிலிருந்து வருகிறது.
தென்காசிப் பாண்டியர்களின் மரபறிய முடியாதவாறு வடுகர்கள் அடையாள
அழிப்பு வேலைகளைச் செய்த போதிலும், இன்றளவும், முன்னமே பதிவு செய்துள்ள
தென்காசி, செங்கோட்டைப் பகுதி வாழ் பள்ளர்களின் நில ஆவணங்களில் 'பாண்டிய
குல விவசாயம்' என்ற பதிவுகளும், பள்ளர்கள் யாவரும் தங்களின் பெயரின்
பின்னொட்டாகப் 'பாண்டியன்' என்னும் தமது குடிப் பெயரினை இணைத்து இடும்
மரபும், தங்களை 'பாண்டியர் சமுதாயம்' என அழைத்துக் கொள்ளும் வளமையும்
மெய்மை வரலாறுகளை உலகறியச் செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக