வியாழன், 10 ஜனவரி, 2013

பசுபதி பாண்டியன் நினைவு தினம்:

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனின், முதலாமாண்டு நினைவு தினம் மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பசுபதிபாண்டியன் கடந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், நந்தவனப்பட்டியில் சிலரால் கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் அவரது சொந்த ஊரான மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், முதலாமாண்டு நினைவு
 தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நினைவஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில்  தூத்துக்குடியில் இருந்து மேலஅலங்காரத்தட்டுக்கு ஊர்வலம் செல்ல காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக