வியாழன், 17 ஜனவரி, 2013

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொங்கல் பொருட்கள் வினியோகம் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு திட்டத்தை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு
தமிழக அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.100 பணம் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க உத்திரவிடப்பட்டு உள்ளது.  ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 84 ரேசன் கடைகளில் 33 ஆயிரத்து 906 ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு திட்டம் வழங்கும் விழா பாஞ்சாலன்குறிச்சி ரேசன் கடையில் நடந்தது. விழாவுக்கு பாஞ்சாலன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் லதா தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன், பொதுவிநியோகத்திட்ட சார்பதிவாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி
சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொங்கள் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம், குலேசெகரநல்லூர். முறம்பன், சங்கம்பட்டி. மலைபட்டி, புளியம்பட்டி ஆகிய கிராமங்களில் பொங்கள் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பட்டவராயன் (தூத்துக்குடி), கதிரேசன் (ராமநாதபுரம்), அய்யப்பன் (திருச்சி), செல்லப்ப (நெல்லை), ராமராஜ் (விருதுநகர்), மாநில தொண்டரணி அமைப்பாளர் பூவாணி லட்சுமணபாண்டியன், ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் கண்ணன், நெல்லை மாநகர இணை செயலாளர் எட்வர்ட், திருச்சி மாநகர செயலாளர் சங்கர், வீராபாண்டிய கட்டப்பொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக