செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

சுதந்திர போராட்ட வீரர் காந்தியின் சீடர் ஜெகநாதன் உடல் காந்திகிராமத்தில் அடக்கம்




கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். இவர், திண்டுக்கல் மாவட்டம், அய்யங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். சுமார் 60 ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ளவர்.
    1968-ம் ஆண்டு கீழவெண்மணியில் 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டு மனம் வருந்திய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 1968-ம் ஆண்டு முதல் நாகை, திருவாரூர் மாவட்டங்களை மையமாகக் கொண்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
    இவரது முயற்சியால் மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இதுவரை 13,500 மகளிருக்குத் தலா ஒரு ஏக்கர் நிலம் லாப்டி மூலம் வழங்கப்பட்டுள்ளது. லாப்டி மூலம் செயல்படுத்தப்படும் மண் குடிசைகளை மாற்றும் திட்டம் மூலம் இதுவரை நாகை மாவட்டத்தில் 2,500 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
    மேலும், இளைஞர் மற்றும் மகளிருக்கு தையல் தொழில், கணினிப் பயிற்சி, தச்சுத் தொழில், இயற்கை உரம் மற்றும் மிளகாய் பொடி தயாரிப்பு உள்ளிட்ட தொழில் பயிற்சிகள் அளிக்கும் பணி, ஆதரவற்ற குழந்தைகளுக்காக தங்கும் விடுதிகள் அமைத்தல், ஏழைப் பெண்களுக்குக் கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் பணி, மதுவிலக்கு பிரசாரம் உள்ளிட்ட சமூகப் பணிகளில் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஈடுபட்டுள்ளார்.
    இவரது சமூகப் பணிகளை கெüரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, பகவான் மகவீர் விருது ஆகியவற்றை வழங்கியுள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகத்தின் 2008-ம் ஆண்டு ஓபஸ் விருது, சுவீடன் நாட்டின் மாற்று நோபல் பரிசு வாழ்வுரிமை விருது உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

சர்வோதய இயக்கத்தின் தலைவரும், காந்தியவாதியுமான ஜெகநாதன் மறைவுக்கு கருணாநிதி, வைகோ, ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து புதன்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி: சர்வோதய இயக்கத்தின் தலைவரும், சிறந்த காந்தியவாதியுமான ஜெகநாதன் தனது 97-வது வயதில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். தனது துணைவியார் கிருஷ்ணம்மாளுடன் இணைந்து மக்கள் பணியாற்றிய ஜெகநாதன், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பூமிதான இயக்கத்தை செயல்படுத்தினார்.

கிருஷ்ணம்மாளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி திமுக ஆட்சியில் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் நிலமற்ற ஏழைகளுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டபோது, அதில் கிருஷ்ணம்மாள் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
ஆழ்ந்த காந்தியவாதியான ஜெகநாதனை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், சர்வோதய இயக்கத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்காகப் பாடுபட்ட ஜெகநாதன் 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். வினோபாபாவேவின் சீடரான அவர், நல்ல உள்ளம் கொண்ட செல்வந்தர்களிடம் இருந்து நிலங்களைப் பெற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

நான் எட்டு வயது மாணவனாக இருந்தபோது மகாத்மா காந்தியின் பேரன் கிருஷ்ணதாஸ் காந்தியுடன் பூமிதான பிரசாரத்துக்காக ஜெகநாதன் கலிங்கப்பட்டிக்கு வந்தார். அப்போதுதான் நான் முதன்முதலாக மேடைறிப் பேசினேன். அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: 1968-ல் கீழ்வெண்மணியில் தலித்துகள் குடிசையில் தீ வைத்து உயிரோடு கொல்லப்பட்டபோது, அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றவர். சர்வதேச அளவிலான பரிசுக்கு இணையான ரைட் லைவ்லி ஹூட் உள்பட பல பரிசுகளைப் பெற்றவர்.

சர்வோதய இயக்கத் தலைவரான ஜெகநாதனை இழந்து வாடும் அவரது துணைவியாருக்கும், குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மறைந்த காந்தியின் சீடர் ஜெகநாதனின் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
காந்தியின் சீடர் ஜெகநாதன் மரணம்
சர்வோதய தலைவர்களில் ஒருவரும், மகாத்மா காந்தியின் சீடரும், வினோபா, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோரின் நெருங்கிய நண்பருமான 100 வயதான ச.ஜெகநாதன் உடல்நல குறைவாக இருந்தார்.
நேற்று முன்தினம் ஜெகநாதன் உடல் நல குறைவால் திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கஸ்தூரிபா மருத்துவமனையில் இறந்தார். அவரது உடல் காந்திகிராம பல்கலைக் கழகத்தின் அருகே உள்ள காந்திகிராம அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி அஞ்சலி
ச.ஜெகநாதன் உடலுக்கு தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ.,, நாகபட்டிணம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயன், நிலக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள், முன்னாள் அமைச்சர் கக்கனின் தம்பி முன்னோடி, சர்வோதய தலைவர் கே.எம்.நடராஜன், ஈரோடு பசுமை இயக்க நிறுவனர் டாக்டர் ஜீவானந்தம்.
காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் நாராயணசாமி, காந்திகிராம அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் கவுசல்யா தேவி, செயலாளர் சிவக்குமார் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து காந்தியவாதிகள், சர்வோதய சங்க பணியாளர்கள் ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
வைகோ
மாலை 4 மணிக்கு ச.ஜெகநாதனின் உடல் அடக்கம் செய்வதற்கான இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு ஜெகநாதனின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் ஊழியரகம் எதிரே உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடலுக்கு ச.ஜெகநாதனின் மகன் டாக்டர் பூமிகுமார் ஈம சடங்குகள் செய்தார்.
ஆறுதல்
இதன் பின்னர் மறைந்த ஜெகநாதனின் மனைவி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், மகன் டாக்டர் பூமிகுமார், மகள் சத்யா ஆகியோருக்கு வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து ஊழியரகத்தில் ஜெகநாதனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.
மறைந்த ஜெகநாதனுக்கு மனைவி கிருஷ்ணம்மாள், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை காந்தி கிராமத்தில் நடக்கிறது. ஜெகநாதன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘வினோபாஜியின் சீடராக திகழ்ந்த ஜெகநாதன், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பூமிதான இயக்கத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்று நல்ல உள்ளம் கொண்ட செல்வந்தர்களிடம் நிலங்களை பெற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். மார்டின் லூதர் கிங் தமிழகத்துக்கு வந்தபோது, ஜெகநாதன் வீட்டுக்கு சென்று பெருமைப்படுத்தினார்’ என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக