செவ்வாய், 16 ஏப்ரல், 2013

வீரர் சுந்தரலிங்கம் பிறந்த நாள் த.ம.மு.க., நலஉதவி வழங்கல்

திருநெல்வேலி:விடுதலைப்போராட்ட வீரர் சுந்தரலிங்கத்தின் 243 வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லையில் த.ம.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
நெல்லை ஜங்ஷன் அம்பேத்கர் சிலை அருகே வீரர் சுந்தரலிங்கம் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் படத்திற்கு மாலை அணிவித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமை வகித்தார். 15 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
பாளை., மார்க்கெட், சமாதானபுரத்தில் மாநகர் மாவட்ட தலைவர் அந்தோணி தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், கொள்கை பரப்பு செயலாளர் எட்வின், மாவட்ட இணை செயலாளர்கள் பொட்டல் கண்ணன், மாநகர் மாவட்ட இளைஞரணி கணேஷ் பண்ணையார், கிங் தேவேந்திரன், இளைஞரணி இணை செயலாளர்கள் துரைப்பாண்டியன், லயன் வரதன், பகுதி பொறுப்பாளர்கள் பெருமாள் பாண்டியன், முத்து, தங்கராஜ், பெருமாள், முத்து கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக