வெள்ளி, 19 ஏப்ரல், 2013

விஜயநாராயணம் அருகே வீரன் சுந்தரலிங்கம் படம் அவமதிப்பு: பொதுமக்கள் மறியல்

நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே உள்ள காரியாண்டியில் வீரன் சுந்தரலிங்கம் பேரவை சார்பாக ஒரு போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள சுந்தரலிங்கம் படத்தில் யாரோ சாணம் பூசி அவமரியாதை செய்திருந்தனர்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து கிளை செயலாளர் முத்து தலைமையில் அங்குள்ள ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். 

சுந்தரலிங்கம் படத்தை அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்க திருமாறன் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தினார். 

இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக