வியாழன், 13 ஜூன், 2013

பட்டியல் இனத்தில் சேர்க்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்


நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதிய தமிழகம் கட்சியினர், அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி தலைமையில் சங்கரன்கோவில் நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
உண்ணாவிரதத்தை துவக்கி வைத்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, அருந்ததியர்களின் உள்ஒதுக்கீடான 3 சதவீதத்தை ரத்து செய்யவேண்டும். நாங்கள் வேறுஎதுவும் கேட்கவில்லை. பள்ளன், குடும்பன், காலாடி, பண்ணாடி, மூப்பன் ஆகிய சாதியை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் இனத்தவர் என அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அதற்காகவே இந்த உண்ணாவிரதம் என்று கூறினார். 
உண்ணாவிரதத்தில் அத்தொகுதிக்குட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக