திங்கள், 1 ஜூலை, 2013

சென்னையில் ஜூலை 15 உண்ணாவிரத போராட்டம் தேவேந்திர குல வேளாளர் அரசியல் முன்னணி முடிவு..

திருச்சி, : ஆய்வு நூலுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து சென் னையில் வரும் ஜூலை 15ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த தேவே ந்திர குல வேளாளர் அரசி யல் முன்னணி முடிவு செய்துள்ளது.
தேவேந்திரகுல வேளா ளர் அரசியல் முன் னணி குழுவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் புரட்சிகவிதாசன் தலைமை வகித் தார். மூவேந்தர் வக்கீல் சங்க துணைத்தலைவர் சுப்ரமணியம், மாநில பொருளா ளர் தட்சிணாமூர்த்தி, நாகை சோமுஇளங்கோ, மாநில இளைஞரணி செய லாளர் திண்டுக்கல் கணேசபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், செந்தில் மல்லர் எழுதிய ‘மீண்டளும் பாண்டியர் வரலாறு‘ என்ற குடிமரபியல் ஆய்வு நூல் கடந்த ஆண்டு மே 30ல் வெளியிடப்பட்டதற்கு தமி ழக அரசு தடை விதித்ததற் கும், நூலை எழுதிய எழுத் தாளர் மீது சாத்தூர் போலீ சார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததற்கும், நூல் களை பறிமுதல் செய்ததற் கும் கண்டனம் தெரிவித்து, ஜூலை 15ம் தேதி சென்னை யில் போர் நினைவு சின்னம் அருகே உண்ணாவிரதம் மேற்கொள்வது. அன்று மாலை தமிழக முதல்வர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் மனு அளிப்பது போன்ற தீர் மானம் நிறைவேற்றப்பட் டது. பின்னர் செய்தியாளர்களிடம் புரட்சிகவிதாசன் கூறுகையில், புத்தகம் வெளி யிட்டு ஒரு வருடம் கடந்த நிலையில் தற்போது எழுத் தாளர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கதக் கது என்றார். கூட்டத்தில், லால்குடி ஆசி ரியர் வரதராஜன், திருச்சி தமிழ்நெஞ்சன், திருப்பூர் பகவதி, கோவை அசோக்பண் ணாடி, புதுகை திருநாவுக்கரசு டென்னீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக