செவ்வாய், 23 ஜூலை, 2013

தென் மாவட்டங்களில் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ...


. ..

புதிய 
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அவர்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டு கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றைத் தீர்த்து வருகிறார். ஒவ்வொரு கிராமங்களிலும் மக்கள் குலவையிட்டும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். டாக்டர் அய்யா அவர்கள் தென்தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவாக பல கிராமங்களில் தேவர், நாடார் உள்ளிட்ட மாற்று சமுதாய மக்களும் வரவேற்பளித்து தங்களுக்கான கோரிக்கை மனுக்களை டாக்டர் அய்யா அவர்களிடம் நேரடியாக அளித்தனர். மக்களிடம் கல்வி, மது ஒழிப்பு, ஒற்றுமை பற்றி பேசிய டாக்டர் அய்யா அவர்கள் தொழில் தொடங்குவது, குழு அமைப்பது, சுய வேலைவாய்ப்பை எப்படி உருவாக்குவது, என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினார். நேரடியாக தெருக்கள், கால்வாய்கள், குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து அவ்வப்போதே உரிய நடவடிக்கை எடுத்தார். அடிப்படைத் தேவைகள், சமூகப் பிரச்சினைகள், சமூக சிக்கல்களுக்கு உடனடி தீர்வு கண்டார். மேலும் தொழில் தொடங்குவது, குழு அமைப்பது, சுய வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு முகாம்கள் புதிய தமிழகம் கட்சி சார்பில் விரைவில் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படும் என்று கூறினார். பல கிராமங்களில் நம் மக்கள் கண்ணீர் மல்க விடுத்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து தன் சொந்த உதவியாக பல்வேறு உதவிகளை செய்தார். அவற்றையெல்லாம் படம் எடுத்து இங்கே பதிவு செய்யலாம். ஆனால் அது புதிய தமிழகத்துக்கான விளம்பரமாகக் கூடும் என்பதாலும், அது புதிய தமிழகத்தின் கொள்கையும் அல்ல என்பதாலும் இங்கே பதிவு செய்யவில்லை. 60 வயதைத் தாண்டிய பிறகும்கூட எவ்வித சலிப்பும், சோர்வும் இல்லாமல் நடுஇரவு 2 மணிவரை துங்காமல், சாலைவசதிகள் சரியாக இல்லாத மூலைமுடுக்கு கிராமங்களுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்து வரும் டாக்டர் அய்யா அவர்களின் சமூகப்பணி, கொள்கை பிடிப்பு, உடனடித் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றைப் பார்த்து பல்வேறு சமூகத்தவர்கள் தொடர்ச்சியாக புதிய தமிழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.. குறிப்பாக நேற்று கூட (18.7.2013) கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மாற்று சமுதாய பிரமுகர்கள் டாக்டர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியில் இணைந்தனர். தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்துக்கு வித்திட்டு சமத்துவத்தை வளர்த்துவரும் சமூக சமநீதி போராளி டாக்டர் அய்யா அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக