புதன், 3 ஜூலை, 2013

விளாத்திகுளம் அருகே தடை செய்யப்பட்ட புத்தகம் விற்றவர் கைது....

விளாத்திகுளம் அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் செந்தில் மள்ளர். இவர் எழுதிய ஒரு புத்தகத்திற்கு கடந்த 30-ந்தேதி தமிழக அரசு தடை விதித்தது. 

இந்த நிலையில் அவரது உறவினரான பெருமாள்சாமி (வயது 63) என்பவர் சாத்தூர் அருகே சின்ன ஓடைப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புத்தகத்தை விற்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெருமாள்சாமியை கைது செய்ததோடு புத்தகங்களையும் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக