செவ்வாய், 9 ஜூலை, 2013

சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன்படி கூட்டணி: கிருஷ்ணசாமி பேச்சு



தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் புதுக்கோட்டையில் உண்ணாவிரத போராட்டம் திங்கள்கிழமை நடந்தது. இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.,வும் கலந்து கொண்டார்.
போராட்டத்தில் பேசிய அவர், 
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் இனத்தை பட்டியல் இனத்தில் சேர்போம் என்று தமிழக ஜெயலலிதா சொன்னார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனால் தான் இந்த உண்ணாவிரதம். 
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு இப்போது ராஜ்யசபா தேர்தலுக்கு தி.மு.கவுக்கு ஆதரவு கொடுப்பது பற்றி கேட்கிறார்கள். அதே போல அடுத்த பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டனி தொடருமா என்று கேட்கிறார்கள். 
இப்போதைக்கு இந்த கூட்டனி அமைந்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அப்போது சந்தர்ப்பம் எப்படி உள்ளதோ அதன்படி கூட்டனி அமைப்போம். இவ்வாறு கூறினார்.
-இரா.பகத்சிங்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக