திங்கள், 8 ஜூலை, 2013

மீண்டும் எழும் பாண்டிய வரலாறு' புத்தகத்துக்கு தடை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்


'மீண்டும் எழும் பாண்டிய வரலாறு' புத்தகத்துக்கு தடை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
சென்னை: "மீண்டெழும் பாண்டிய வரலாற்று" என்ற புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீது பதி்ல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாதி மோதலை தூண்டும் வகையில் கருத்துக்கள் இருப்பதாக கூறி "மீண்டும் எழும் பாண்டிய வரலாறு" என்ற புத்தகத்துக்கு தமிழக அரசு அண்மையில் தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக் கோரி, புத்தகத்தின் ஆசிரியர் செந்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் தொடர்ந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், புத்தகத்துக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும், மனு மீது ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக