புதன், 3 ஜூலை, 2013

“நூலை எழுதிய ‘மள்ளர் மீட்புக் களம் ‘ தலைவர் .செந்தில் மள்ளர் —————————————————————————————————- செய்த குற்றம் என்ன ?


“நூலை எழுதிய ‘மள்ளர் மீட்புக் களம் ‘ தலைவர் .செந்தில் மள்ளர்
—————————————————————————————————-
செய்த குற்றம் என்ன ?
————————————-
தமிழர்களுக்கு இதுவரை உண்மையான வரலாறு எழுதப்படவில்லை என்பது உண்மையான வரலாற்று அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்று.
இதுவரை தமிழர்களின் வரலாற்றை தமிழரல்லாதோரே எழுதியுள்ளனர். அவர்களால் தமிழர்களின் உண்மையான வரலாற்றின் செயற்களத்தை “இருண்டகாலம் ” என்ற ஒற்றைசொல்லில் முடக்கி மறைக்கப்பட்டது. இவைகள் தொடர்கதையாகிவரும் இன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் தமிழர்களின் விடியலாய் உதித்த பாவாணரின் வழியில் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு ” எனும் தமிழர்களுக்கான ஆய்வு நூலை எழுதியதற்காக அந்நூல் தற்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்டதுடன் அதனை ஆக்கிய நூலாசிரியர் தோழர் .செந்தில் மள்ளரை கைது செய்யவும் காவல்துறை முனைந்து உள்ளது.கருத்தை கருத்தால் எதிர்கொள்வதே ஜனநாயகப் பண்பு. அதைவிடுத்து இத்தகைய கைது நடவடிக்கை என்பது ஒரு பள்ளனோ ,ஒரு பறையனோ தமிழர் வரலாற்றை எழுத கூடாது என்ற புதிய அரசியல் தீண்டாமை தமிழர் ஓர்மைக்கு முரணாக அமையும்.
மள்ளர் மீட்புக்களம் எனும் சமுதாய மீட்சி இயக்கத்தினை நடத்துவதுடன், அனைத்து தமிழ் சமூகத்திடமும் நல்லிணக்கத்தை வளப்படுத்த “தமிழ்ச் சமூகங்களின் கூட்டமைப்பு ” எனும் கூட்டியக்கத்தினை தோழர்.செந்தில் மள்ளர் நடத்திவருகிறார்.மேலும் தமிழ்தேசிய சிந்தனை மக்களிடம் சென்று சேர “மண்ணுரிமை ” எனும் மாத இதழ் மூலம் விழிப்புணர்வை ஊட்டிவருகிறார்
.கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முள்ளி வாய்க்காலில் தமிழர்களை கொன்றுகுவித்த காங்கிரஸ் தென்மாவட்டத்தில் ஒருதொகுதியில் கூட வெற்றிபெற கூடாது என தீவிர பரப்புரையை காங்கிரஸ் க்கு எதிராக மேற்கொண்டார். தமிழ் தேசிய இயக்கங்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார்.மேலும் 2009-ல் மாவீரன் முத்துகுமாரின் ஈகத்தை தொடர்ந்து 2010-ல் முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகியர்களின் நினைவை போற்றும் விதமாக “மாவீரன் முத்துகுமார் நினைவேந்தல் ஒருங்கிணைப்புக் குழு ” சார்பில் முன்னெடுக்கப்பட்ட “ஈகியர் சுடர் பயணத்தை ” கன்னியாகுமரியில் இருந்து சென்னை கொளத்தூர் வரை சுடர்பயணம் மேற்கொண்டார்.2011-லும் மூன்று வழித்தடங்களில் ஒன்றாக சுடர்பயணம் மேற்கொண்டார்.
தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும் என்பதை வலியுறித்தி சென்ற ஆண்டு “திராவிடனே வெளியேறு இயக்கம் ” என்ற இயக்கத்தினை தொடக்கி ,திராவிடர்கள் அரசியலில் இருந்து அவர்களாகவே வெளியேற வேண்டும் என வலியுறித்தி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு பல்வேறு தளங்களில் தமிழ்,தமிழ்தேசியம்,திராவிட எதிர்ப்பு,சமூக முன்னேற்றம் என செயப்பாட்டு வருவதுடன் தமிழர்களின் உண்மையான வரலாற்றினை எழுதவேண்டும் என்ற முனைப்பில் எழுதப்பட்டதே “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” இதனை தமிழ் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அவாவில் 10 ஆண்டுகால உழைப்பின் உண்மையை கொண்டுசெல்ல முனைந்து சாத்தூரில் நூல்வேளியிட்டு விழாவினை நடத்த முனைந்த வேளையில் தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது.
நீதிமன்றத்தை நாடி மதுரையில் நடத்த முனைந்த வேளையில் ,
இன்று தமிழரல்லாதோரின் கூட்டுமுயற்சியால் தடைசெய்யப்பட்டுள்ளது.தமிழர் வரலாற்றை தமிழன் எழுதகூடாது என மறைமுகமாக வந்தேறிகளால் போர்தொடுக்கப்பட்டுள்ளது.தமிழர்களே வீணர்களின் முயற்சியை முறியடிக்க குரல்கொடுங்கள்.ஒன்று கூடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக