ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

மாஞ்சோலை வென்ற மன்னரின் மகத்தான மக்கள் சந்திப்பு


தமிழ்நாட்டில் மற்ற அரசியல் கட்சிகளிடமிருந்து சற்று வேறுபட்டு, உழைக்கும் மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் போராடி வருகின்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர்.க.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள், அனைவரும் நேற்று சுதந்திர தினைத்தை கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் முதலாளி வர்க்கத்தால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து சிக்கல்களை சுமந்து இன்றுவரை அந்நியரின் ஆதிக்கத்திலேயே வாழ்ந்து வரும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் தற்போதைய குறைகளை, கோரிக்கைகளை கேட்கும் விதமாக ஒரு நாள் சுற்று பயணமாக மாஞ்சோலை பகுதிக்கு சென்றார். அங்கு தேயிலை தோட்ட தொழிலாளிகளான உழைக்கும் மக்கள் அவரிடம் 3 கோரிக்கைகளை வைத்தனர். மாஞ்சோலை மக்கள் மருத்துவர் அய்யா அவர்களை இன்றுவரை "தேயிலை தோட்ட தொழிலாளிகளின் தெய்வமாக" தான் கருதுகின்றனர் என்பது அவர்கள் அளித்த வரவேற்பிலேயே தெரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக