ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி..



பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இமானுவேல் சேகரனின் 56-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களின் விவரம்:
இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமையில் இளைஞர் மன்ற தலைவர் துரைகாந்த் மற்றும் அக் கிராம பொதுமக்கள் காலை 7.00 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் அழகர்சாமி, செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தி.மு.க. சார்பில் அக் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், தமிழரசி மற்றும் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், சுப.த. திவாகரன், உ.திசைவீரன், சேது.கருணாநிதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் ஏ.அன்வர்ராஜா, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக மாவட்டச் செயலாளர் நென்மேனி என்.ஜெயராமன் தலைமையில், பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நகர் செயலாளர் கே.ஏ.எம்.குணா, மதுரை மாவட்டச் செயலாளர்கள் பூமிநாதன், வீர.தமிழ் செல்வம் ஆகியோர் கட்சியினருடன் அஞ்சலி செலுத்தினர்.
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் தொல்.திருமாவளவன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் பாம்பூர் இருளன் ஆகியோர் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் ஏ. ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ஆர்.ராம்பிரபு, மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜெ.ஆலம், முகம்மது ரபீக், நகர் தலைவர் கோதண்டராமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ.க. சார்பில் மாவட்டத் தலைவர் கே.சண்முகராஜ், எஸ்.சி. பிரிவு மாநில இளைஞரணிச் செயலாளர் இளங்கண்ணன், வர்த்தக அணி நாகராஜன் ஆகியோர் அக் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் நாசாத் திருவள்ளுவன் தலைமையிலும், மள்ளர் நாடு நிறுவனத் தலைவர் சுப.அண்ணாமலை, சுரேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாவட்டத் தலைவர் சிவகுருநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தியாகி இமானுவேல் சேகரன் பேரவை நிறுவனத் தலைவர் பூ.சந்திரபோஸ் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், பல்வேறு நகர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள சமுதாய மக்கள் பால்குடம் எடுத்து வந்தும், முளைப்பாரியுடன் வந்தும் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக