ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

இம்மானுவேல்சேகரன் நினைவிடத்திற்கு வாடகை கார்களில் செல்ல போலீஸ் அனுமதிக்க வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ....


புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ இன்று மதுரை வந்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’’பரமக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11–ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வருகிற 11–ந்தேதி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வாடகை கார்களில் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு வாடகை கார்களில் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். இது சரியல்ல. எல்லோரும் சொந்தமாக கார் வைத்து இருக்க முடியாது. எனவே போலீசார் வாடகை கார்களில் செல்ல அனுமதி வழங்க வேண்டும். அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அரசு பஸ்கள் வாடகைக்கு விட வேண்டும்’’என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக