புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசும்போது, பிரதமர்
மட்டும் கலந்துகொள்ளக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியதால் அவர்
கலந்துகொள்ளவில்லை. ஒருவரும் கலந்துகொள்ளக்கூடாது என்று தீர்மானம்
நிறைவேற்றியிருந்தால் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள்.அமைச்சர் நத்தம்
விஸ்வநாதன்: இங்கு கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு பிரதமர்
மதிப்பளித்திருந்தால் இந்தியா சார்பில் யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள்.
இந்த விஷயத்தை கிருஷ்ணசாமி மூடி மறைக்கப்பார்க்கிறார். அமைச்சர்
கே.பி.முனுசாமி: இப்படிப்பட்ட கூட்டத்தில் தமிழர்களின் உணர்வுகளை
நீர்த்துப்போகச் செய்து விடாதீர்கள். அப்போது பரமக்குடி சம்பவம் குறித்து
பேச ஆரம்பித்தார். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி தரவில்லை.பேரவைத் தலைவர்:
ஒரு முக்கியமான தீர்மானத்தின் மீது பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அதை விட்டுவிட்டு வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கொடுத்த நேரத்தை பயன்படுத்தவில்லை, உட்காருங்கள். (தொடர்ந்து கிருஷ்ணசாமி பேச முயன்றார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நின்றுகொண்டேயிருந்தார்) பின்னர் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹீருல்லாவைப் பேசுமாறு பேரவைத் தலைவர் அழைத்தார். ஜவாஹீருல்லா பேசத் தொடங்கினார். அப்போதும், கிருஷ்ணசாமி நின்றுகொண்டு பேரவைத் தலைவரிடம் பேச அனுமதி கேட்டார். ஜவாஹீருல்லா பேசி முடித்தவுடன் மீண்டும¢ கிருஷ்ணசாமி பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவைத் தலைவர் இருக்கை முன்பு கிருஷ்ணசாமி அமர்ந்து தர்ணா செய்தார். இதையடுத்து, அவரை பேரவையிலிருந்து வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். அவரை பேரவைக் காவலர்கள் வெளியேற்றினர். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக