புதன், 13 நவம்பர், 2013

போலீசாரைக் காப்பாற்ற முயலும் சம்பத் கமிஷன் அறிக்கை...!!!


பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் வீர வணக்கம் செலுத்த சென்ற வர்கள் மீது காவல்துறை ஏவிய துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசு நியமித்த நீதிபதி சம்பத் கமிஷன் அறிக் கை உண்மையை மூடி மறைத்துதவறிழைக்கும் காவல் துறையைக் காப்பாற்ற முயற் சிக்கிறது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.

இதுதொடர்பாக அமைப் பின் மாநிலத்தலைவர் பி. சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகி யோர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:தென் தமிழகத்தில் குறிப்பாக ஒன்றுபட்ட ராம நாதபுரம் மாவட்டத்தில் தீண் டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தீவிர களப்பணி யாற்றியவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தியாகிஇம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில்(2011, செப் டம்பர் 11) பரமக்குடிக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முறையாக முன் அனுமதி கோரியிருந்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தலைவர் திரு.ஜான் பாண்டியன் அவர் களைக் கைது செய்ததைத் தொடர்ந்து பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சுமார் 50 பேர் மறியலில் ஈடுபட் டனர். வழக்கமான போக்குவரத்து முற்றிலும் தடை செய் யப்பட்டிருந்த சூழ்நிலையில் வீரவணக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் மட்டுமே அந்தசாலையை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.

வீர வணக்கம் செலுத்த செல் கிறவர்களுக்கு வழிவிட்டு சாலையின் ஓரத்தில் மறியல் செய்தவர்கள் மீது எந்தமுகாந்திரமும் இன்றிகாவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதை வீடியோக் காட்சிகள் மூலம் அறிய முடிகிறது. துப்பாக்கிச்சூடு தொடர் பாக சட்டமன்றத்தில் முதல் வர் வாசித்த அறிக்கை உண் மைச் சம்பவங்களுக்கு மாறான தாகவும், காவல்துறையைப் பாதுகாப்பதாகவும் இருந்த தாலேயே பாதிக்கப்பட்ட மக்களும், நியாயம் கேட்டு போராடுகிற அமைப்புகளும் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், தமிழக அரசு அவசரமாக நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக்கமிஷனை அமைத்தது. நீதிபதி சம்பத் கமிஷனின் அறிக்கை 30.10.2013 அன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும் செந்திவேலன் என்கிற காவல்துறை அதிகாரி யைத் தாக்க முற்பட்டதாகவும், காவலர்களுடன் காவல் நிலையத்தைத் தீ வைக்க முயற்சித்ததாகவும், ஆகவே தற்காப்புக்காகத்தான் காவலர் கள் சுட்டார்கள். காவலர்கள் நடந்துகொண்ட விதம் பாராட்டுக்குரியது என்று சம்பத் கமிஷன் அறிக்கை கூறுகிறது.

அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் நம்பக மானதல்ல என்றுதான் பாதிக்கப்பட்ட மக்களும், பாதிப்புக்கு எதிராகப் போராடிய அமைப்புகளும் குற்றம் சாட்டி சம்பத் கமிஷனை முற்றிலுமாகப் புறக்கணித்தனர். தற்போது சம்பத் கமிஷன் அறிக்கை காவலர்களின் தவறை மூடிமறைப்பதோடு, பாதிக்கப் பட்ட மக்களையே குற்றவாளி என்று சித்தரிக்கிறது. ஆகவே, காவல்துறையைக் காப் பாற்றுவதற்காகவே சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது என்பதை அதன் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

தமிழக அரசும், தென் மாவட்டங் களில் பதற்றமான தினங் களில் ஒன்றான, அக்டோபர் 30 அன்று இந்த அறிக்கையை வெளியிட்டதும் ஏற்புடையது அன்று. மேலும் அறிக்கையைப் பெற்று பல மாதங்கள் கடந்தபின்பு சட்டமன்றக் கூட்டத் தொடரின் இறுதி தினத்தன்று அறிக்கையை தாக்கல் செய்து சட்டமன்ற உறுப்பினர்கள் இதன் மீது கருத்து கூறும் வாய்ப்பினையும் தடுக்கும் விதமாக நடந்து கொண்டது.

சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ளபோது அந்த விசா ரணையையே சீர்குலைக்கும் விதமாகவே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக உணர முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக