ஞாயிறு, 15 டிசம்பர், 2013

------- ஆங்கிலேயரை எதிர்த்த கொங்கு நாட்டு புரச்சிப்படைத் தளபதி மாவீரன் இராமசாமி மள்ளர்

------- ஆங்கிலேயரை எபுரச்சிப்படைத் தளபதி மாவீரன் இராமசாமி மள்ளர் -----

ஆங்கிலேயரிடம் அகப்பட்டுக்கொண்டு இந்திய பெருமண்ணை மீட்க நாடு தழுவிய சுதந்திர போராட்டம் பல வகைகளில் நடை பெற்றது. காலத்தின் தேவை கருதி ஆகிலேயரை நாட்டை விட்டு விரட்ட மிதவாத போக்குடன் சில அமைப்பினரும், ஆயுதம் ஏந்திய போராட்டத்தால்தான் ஆங்கிலேயரை விரட்ட முடியும் என சில அமைப்பினரும் களமிறங்கி போராடினர். நாடு முழுவதும் சுதந்திர போராட்ட கனல் பற்றி எரிந்தது. இப்போராட்டத்தில் கோவைப் பகுதியும்தன்னை இணைத்துக் கொண்டது. மாவீரன் திப்பு சுல்த்தான் இறந்த பிறகு குறிப்பிட்டபடி, புரட்சிகள் மந்தநிலைப்பட்டன. இந்த நிலையில், அடங்கியக் கிடந்த சுதந்திர தாகத்தைக் கிள்ளி விட்ட ஆயுத போராளியாக ஆங்கிலேயரை விரட்ட அதிரடிப்படை திரட்டிய மாவீரன் ஒருவர் கோவைப் பகுதிக்கு தலைமை ஏற்றார் அவரே இராமசாமி மள்ளர்.

1801 ல் பள்ளர் தலைவரான தாசர் என்னும் இராமசாமி தமக்கு தெய்வீக அதிகாரம் கிடைத்துள்ளது எனக்கூறி வரிகொடா இயக்கத்தை கோவை, சேலம் மாவட்டங்களில் ஏற்ப்படுத்தினார். அவர் காடுகளில் பதுங்கி இருந்து புரட்சியாளர்களை ஓன்று சேர்த்து புரட்சியை பெருமளவில் ஏற்ப்படுத்தினர். ஆனால், அப்புரட்சி அடக்கப்பட்டு விட்டது. “என டாக்டர் சுவா தென்னிந்திய வரலாற்று பக்கம் 351 இல் குறிப்பிட்டுள்ளார். டாக்டர் சுவாமிநாதன் குறிப்பிட்ட பள்ளர் இராமசாமி தாசர் தற்போதைய வளர்ந்த கோவைக்கும் மேற்க்கே உள்ள வேடப்பட்டி வன்னியம் பாளையத்தை சேர்ந்தவர். அவருடைய வழிவந்தோர் தற்போதும் அவ்வூரில் வசிக்கின்றனர். அப்புரட்சியாளர் பற்றிய நாட்டுப்புற பாடல் அண்மைக்காலம் வரை பள்ளர்களால் பாடப்பட்டு வழக்கில் இருந்து இருக்கிறது. இவர், வைணவ கடவுளான காரமடை தாசர் கூட்டத்தைச் சேர்ந்தவர்.

கொங்கு மண்டல புரட்சியாளர் தீரன் சின்னமலையுடன் தொடர்பு கொண்டிருக்கிறார். திப்பு சுல்தானி தலைமையை விரும்பியவராகவும், திப்பு சுல்தான் இறந்த பின்பு ஆகிலேயரை எதிர்க்க தானே படை நடத்தியுள்ளார். தமிழ்மண் காக்கப்பட வேண்டும் என்ற சுதந்திர தாகத்தில் திரட்டப்பட்ட இப்புரட்சிப்படை கோவை முதல் சேலம் வரையிலான புரட்சியாளர்களை கொண்டதாக இருந்துள்ளது. ஆனால், இப்புரட்சி படையை ஆங்கிலேயயர்கள் அவ்வாண்டே எளிதில் அடக்கிவிட்டதாகத் தெரிகின்றது. ஆங்கிலேயர்களாலும், பிற்கால வரலாற்றாலும் மறைக்கப்பட்ட இராமசாமி மள்ளரின் வரலாற்றை இன்றளவும் அச்சமுதாயத்தினர் நினைவு கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக