புதன், 1 ஜனவரி, 2014

திமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி...





கிருஷ்ணசாமி நேற்று மதியம் 12.20 மணிக்கு, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடனிருந்தார். பின்னர், கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக, ஆங்கில புத்தாண்டின் போது திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறேன்.

அதேபோல், இன்றும் அவருக்கு நான் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தேன். புதிய தமிழகம் கட்சி ஏற்கனவே ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழிக்கு ஆதரவளித்தது. அதன்பிறகு ஏற்காடு இடைத்தேர்தலிலும் ஆதரவளித்தோம். நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம்.

இன்றைய சூழ்நிலையில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வலுவான கூட்டணி அமைப்பதற்கு, பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து நாங்கள் பேசினோம். காங்கிரஸ், பாஜ அல்லாத மற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முயற்சிகளை மேற்கொள்வோம். அதுதான் நாட்டுக்கு நன்மை தரும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக