இம்மானுவேல்சேகரனுக்கு தங்கச்சிலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலியில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட் திரண்ட மள்ளர் நாடு அமைப்பினர் 24 பேரை போலீஸார் கைது செய்தனர்்.
தியாகி இம்மானுவேல்சேகரனுக்கு தங்கச்சிலை அமைக்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை அரசு விழா அறிவிக்க வேண்டும். தாமிரவருணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேருக்கு நினைவுத் தூண்கள் எழுப்ப வேண்டும். வீரன் சுந்தரலிங்கதேவேந்திரன், பூலித்தேவன் ஆகியோருக்கு திருநெல்வேலியில் தாமிரவருணி நதிக்கரையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை மள்ளர்நாடு, மள்ளர் விடுதலை முன்னணி, இம்மானுவேல்சேகரன் ரத்ததானக் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு திரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தக் கட்டமாக முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் நிலையத்திற்குள் செல்ல முயன்ற 24 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக