சனி, 1 பிப்ரவரி, 2014

824 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. வழங்கினார்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மருதன்வாழ்வு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் விழா நடந்தது. பஞ்சாயத்து தலைவி வள்ளியம்மாள் ரவி தலைமை தாங்கினார். தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் வெள்ளத்தாய் வரவேற்று பேசினார். புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., 824 பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகளை வழங்கினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார்.
மாவட்ட செயலாளர் கனகராஜ், நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் அரவிந்தராஜா, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் செல்லப்பா, மாவட்ட பொருளாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாலமுருகன், ராமசுப்பு, ராமச்சந்திரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை தாசில்தார் (சிறப்பு செயலாக்க திட்டம்) விமலா நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக