வியாழன், 27 பிப்ரவரி, 2014

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜெ.செயல்பட்டதால் வந்த சிக்கல் இது- டாக்டர் கிருஷ்ணசாமி ..........

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜெ.செயல்பட்டதால் வந்த சிக்கல் இது- டாக்டர் கிருஷ்ணசாமிசென்னை: எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா செயல்பட்டதால்தான் இப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழக முதல்வர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து ஓரிரு நாட்கள் காலதாமதம் ஆனாலும் கூட, எல்லா விதமான சட்ட விதிமுறைகளையும் ஆலோசித்து மத்திய அரசின் இணக்கத்தோடு நடவடிக்கை எடுத்திருந்தால், இது நிச்சயமாக வெற்றிகரமாக இருந்திருக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற நடவடிக்கையின் விளைவாக தற்போது மீண்டும் அவர்கள் 3 பேரின் விடுதலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழுபொறுப்பையும் தமிழக முதல்வரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக