சனி, 22 மார்ச், 2014

குற்றாலத்தை சர்வ தேச சுற்றுலாதலமாக்குவேன்- தென்காசி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ..


விருதுநகர்: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற வைத்து எம்.பியாக குற்றாலத்தை சர்வ தேச சுற்றுலாதலமாக்குவேன்- தென்காசி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் குற்றாலத்தை சர்வதேச சுற்றுலா தலமாக்குவேன் என்று திமுக கூட்டணியில் போட்டியிடும் தென்காசி தொகுதி வேட்பாளர் புதியதமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். தென்காசி லோக்சபா தொகுதியின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமணமண்டபத்தில் திமுக கூட்டணிகட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. திமுக மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைப்பெற்றக் கூட்டத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது; கடந்த 40ஆண்டுகாலமாக தென்காசி தொகுதியில் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை நான் வெற்றி பெற்றால் மேற்க்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாய் கேரளமாநிலக் கடலில் கலக்கும் 30ஆயிரம் டி.எம்.சி.தண்ணீரை கிழக்கு நோக்கித்திருப்பிவேன். இதன் மூலம் வறட்சியாய் இருக்கும் தென்மாவட்டங்களை வளமான பகுதியாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன். மேலும் நம் பகுதியில் எலுமிச்சை,திராட்சை,மலர்கள், மதிப்புக் கூட்டக் கூடிய பொருட்களாக மாற்றமுடியாத நிலையுள்ளது. இதனை மாற்றிட முயற்சிகொள்வேன். குற்றாலத்தை உலக அளவில் சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றிட முயற்சி மேற்கொள்வேன்,விருதுநகர்-கொல்லம் அகல ரயில்பாதை பணியை விரைந்து முடிக்க செய்து மின் பாதையாக மாற்றி தென்மாவட்டங்கள் பொருளாதாரத்தில் உயர முயற்சி மேற்கொள்வேன் என்றார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக