சனி, 22 மார்ச், 2014

தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்: கிருஷ்ணசாமி பேட்டி


புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தி.மு.க. கூட்டணியில் தென்காசி தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தி.மு.க. தலைவர் கலைஞர், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். இதற்காக எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தேவை இல்லை. அதற்கு கால அவகாசம் உள்ளது. விரைவில் தென்காசி தொகுதியில் பிரசாரம் செய்வேன். தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக