வெள்ளி, 14 மார்ச், 2014

திமுக கூட்டணியில் மமக, புதிய தமிழகத்துக்கு ஒரு இடம்..


 


பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தி.மு.க. தலைமை, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 
மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ரியாபி செய்தியாளர்களிடம் பேசியபோது, மனிதநேய கட்சிக்கு மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி பாராளுமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக