திங்கள், 31 மார்ச், 2014

‎குற்றாலத்தில்‬ நடைபெற்ற வழக்கறிஞா்கள் பிாிவு ஆலோசணைக் கூட்டத்தில் வெற்றி வேட்பாளா் டாக்டா் கிருஷ்ணசாமி பேச்சு..

கேரளாவில் மேற்கு தொடா்ச்சி மலையில் 30,000 டிம்சி தண்ணீா் உற்பத்தியாகி வீனாக அரபிக்கடலில் கலக்கிறது. அத்தண்ணீரை வைத்து கேரளா விவசாயம் ஒன்றும் செய்வதில்லை. இத்தொகுதியில் வலுவான ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் அமைந்தால் ஒரு டிம்சி தண்ணீராவது கொண்டுவரலாம். அவ்வாறு நடந்தால் தென்காசி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் விவசாயத்தில் முன்னேறலாம்.
இந்திய நாட்டில் ஒரு மோசமான பிரதமா் அமைந்தாலும் கூட ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் வலுவாக அமைந்தால் அத்தொகுதி நல்ல வளா்ச்சி அடையும். ஆனால் ஒரு நல்ல பிரதமா் அமைந்து ஒரு மோசமான நாடாளுமன்ற உறுப்பினா் அமைந்தால் அத்தொகுதி வளா்ச்சி அடையாது.
தென்காசி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் பலபோ் வேலை பாா்க்ககூடிய தொழிற்சாலைகள் கொண்டுவருவேன்.
எனது வெற்றியின் பிரதிபலிப்பு நெல்லை,தூத்துக்குடி,விருதுநகா் போன்ற பெரும்பான்மையான மாவட்டங்களின் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக