வெள்ளி, 14 மார்ச், 2014

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்..


தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் குற்றாலத்தில் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.
இது குறித்து நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. போட்டியிடுகிறார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் நெல்லை மாவட்ட எல்லைக்குள் தென்காசி, கடையநல்லூர், வாசுதே வநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளுக்கும் தி.மு.க. தலைவரால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. அறிமுக கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, குற்றாலத்தில் உள்ள திருவிதாங்கூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மேற்கண்ட 4 சட்டசபை தொகுதியில் உள்ள முன்னணி நிர்வாகிகள், தலைமைக்கழக, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், கழக சார்பு அமைப்பு நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக