சனி, 26 ஏப்ரல், 2014

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

நிறுவனர்அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
நடந்து முடிந்த 2014- பாராளுமன்றத் தேர்தலில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் புதிய தமிழகம் கட்சி நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களுக்கு "தொலைக்காட்சிப்பெட்டி" சின்னத்தில் வாக்களித்த தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் கட்சி சார்ந்த/கட்சி சாராத அனைத்து தரப்பட்ட வாக்காள பெருமக்களுக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பாகவும், புதிய தமிழகம் கட்சி சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
தேர்தல் நாளுக்கு முன்பாகவே கருத்துக் கணிப்பு நடத்தி தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் டாக்டர் அய்யா அவர்கள் தான் வெற்றி பெறுவார் என்று தமிழகமெங்கும் பறைசாற்றிய நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர், ஜூனியர் விகடன், ஏகலைவன் உள்ளிட்ட வார இதழ்களுக்கும், தின மலர், தினகரன், தி இந்து (தமிழ்) உள்ளிட்ட தினசரி இதழ்களுக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பாகவும், புதிய தமிழகம் கட்சி சார்பாகவும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
மேலும் எதிரணி வேட்பாளர்களின் பணபலத்தையும், அரசியல் பலத்தையும், அரசு அதிகாரத்தையும், ஆட்சியாளர்களின் ஆணவத்தையும் உடைத்தெறிந்து, தகர்த்தெறிந்து டாக்டர் அய்யா அவர்கள் இத்தகைய முன்னிலை அடைய அருந்தொண்டாற்றிய
திராவிட முன்னேற்ற கழகம்,
மனிதநேய மக்கள் கட்சி,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம்,
எஸ்.டி.பி.ஐ.,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,
விடுதலைச் சிறுத்தைகள்,
பெருந்தலைவர் மக்கள் கட்சி,
அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சி,
திராவிடர் கழகம்,
தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கம்,
உழவர் உழைப்பாளர் கட்சி
உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் அனைத்து தோழமை கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைப் பொறுப்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...
குறிப்பாக சாதியத்தையும், மத வெறியையும் கருவருத்து வெற்றி ஒன்றே இலக்காக வைத்து இரவு பகல் பாராது, அரைவயிற்று உணவோடு, ஓயாது உறங்காது பாடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆகிய கட்சிகளின் மாநில நிர்வாகிகள் முதல் மாணவரணி நிர்வாகிகள் வரை உள்ள அனைத்து பொறுப்பாளர்களுக்கும், ஏனைய இஸ்லாமிய சொந்தங்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, தொகுதி, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், மாணவரணி, மகளிரணி நிர்வாகிகளுக்கும், முன்னாள்-இன்னாள் பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக