வியாழன், 1 மே, 2014

தேர்தல் கமிஷனுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்து பணத்தை வாரி இறைத்துள்ளார்: டாக்டர் கிருஷ்ணசாமி.


சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி,
திமுக கூட்டணி சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்கு சேகரித்ததற்காக திமுக தலைவர் கலைஞரை சந்தித்து நன்றி தெரிவித்தேன். வாக்காளர்களுக்கு அதிமுகவினர் வழங்கிய பணத்தை மீறி, திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் துணையுடன் அதிமுக வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளது. இந்த ஜனநாயக படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலைஞரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் விரைவில் திமுக கூட்டணித் தலைவர்களை அழைத்து இதுபற்றி பேசி முடிவு எடுப்பதாக கூறினார். 
தேர்தல் கமிஷனுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்து பணத்தை வாரி இறைத்துள்ளார். இதற்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும், தான் போட்டியிட்ட தென்காசி தொகுதியில் வாக்குச்சாவடிக்குள்ளேயே அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தனர். தேர்தல் பொறுப்பாளரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் நேரடியாக 
களத்தில் இறங்கி பணப்பட்டுவாடா செய்தனர் என்றார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக