வியாழன், 19 ஜூன், 2014

டாக்டர்.கலைஞர் அவர்களுடன் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சந்திப்பு..


தி.மு.க தலைவர் டாக்டர்.கலைஞர் அவர்களை  புதிய தமிழகம் கட்சி தலைவர் இன்று காலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறியதாவது:-

வளர்ந்த ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியா மற்றும் தென்அமெரிக்கா நாடுகளிலும் உலகின் பெரும்பாலான நாடுகளிலும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்வு முறையே அமலில் உள்ளது. விகிதாச்சார தேர்வு முறை மூலமாக ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கு ஏற்ப அக்கட்சிகளுக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் கிடைப்பர். இதன் மூலம் ஜனநாயகம் வலுப்பெறும்; கட்சிகளிடையே தோன்றும் பிரிவினைகள், மக்களிடையே தோன்றும் சாதி, மத, மொழி, பிராந்திய மனப்பான்மைகள் மறைந்து போகும்   என்பதை வலியுறுத்தி விகிதாச்சார தேர்வு முறை குறித்து ஒத்த கருத்துள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த    டாக்டர்.கலைஞர் அவர்கள் தலைமையில் தேசிய கருத்தரங்கம் நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டேன் என டாக்டர். க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
அப்போது மாநில நிர்வாகிகள்  வி.கே.அய்யர்,துறைமுகம் கண்ணன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக