சனி, 28 ஜூன், 2014

இரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் புதிய தமிழகம் கட்சியினர் கைது..



மத்திய அரசு அறிவித்துள்ள ரெயில் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்பப் பெறக் கோரியும் பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று திருச்சிக்கு வரும் ஜனசாதாப்தி ரெயிலை மறித்து பேராட்டம் நடத்தப் போவதாக அக்கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் ஐயப்பன் அறிவித்திருந்தார்.
இதன்படி இன்று காலை முதலே திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் குவியத் தொடங்கினர். போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், கண்டோன்மென்ட் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு திருச்சி வந்த ஜனசதாப்தி ரெயிலை மறிக்க புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர்கள் ஐயப்பன், வக்கீல் சங்கர் ஆகியோர் தலைமையில் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு தள்ளு முள்ளு நிலவியது. போலீசாருடன் புதிய தமிழகம் கட்சியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் ஐயப்பன், வக்கீல் சங்கர், நிர்வாகிகள் கோபி, அசோக், ஒன்றிய செயலாளர்கள் தினகரன், ஷாஜகான், தங்கத்துரை, பிச்சமுத்து, மேற்கு தொகுதி பொறுப்பாளர் சண்முகம், இளைஞர் அணி பாலு உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் பீமநர் திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக