வியாழன், 10 ஜூலை, 2014

சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்- புதிய தமிழகம், மமக வெளிநடப்பு .............

சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்திலிருந்து இன்று திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து தொடரைப் புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. அதேசமயம், திமுகவின் புதிய கூட்டாளிகளான புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இன்று வெளிநடப்பு செய்தனர். உரிமை மீறல் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் இன்று சபையில் வலியுறுத்தினர். ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி தரவில்லை. தொடர்ந்து திமுகவினர் கோரிக்கை எழுப்பியதால் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்றினர். இதையடுத்து கூட்டத் தொடரை முழுமையாக புறக்கணிப்பதாக திமுக பின்னர் தெரிவித்தது. இந்த நிலையில், திமுக வெளியேற்றப்பட்டதை கண்டித்து, புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி வெளிநடப்பு செய்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக