புதன், 30 ஜூலை, 2014

சட்ட பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு..


சட்ட பேரவையிலிருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு!

krishnasamyஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு கூறிய கருத்து பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து பற்றி பேச அனுமதி கோரினார்.
ஆனால், கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். இதை கண்டித்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் இதுபோன்று கருத்து தெரிவித்தால் நீதித்துறை மாண்பு கெட்டுவிடும் என்றும், முன்னாள் நீதிபதி கட்ஜுவின் கருத்து கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக