வெள்ளி, 25 ஜூலை, 2014

தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!


தாமிரபரணி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதலையை முன்னிறுத்தி 23.07.1999-ல் புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்த சரித்திரம் கண்டிராத சம உரிமை போரில் களம்கண்டு உயிர் நீத்த சிறுவன் விக்னேஷ் உள்ளிட்ட 17 சமூக நீதிப் போராளிகளுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக தென்சுடர் டாக்டர் அய்யா அவர்கள் தலைமையில் பல்லாயிரக்கணக்கான புதிய தமிழகம் தொண்டர்களின் வீரவணக்க முழக்கங்களோடு மாபெரும் பேரணியாக சென்று மலர்வளையம் வைக்கப்பட்டது. இவ்வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு நம் இனத்தின் எழுச்சியை மீண்டும் ஒருமுறை இந்த உலகுக்கு நினைவூட்டிய புதிய தமிழகம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகளுக்கும், பல்வேறு கிராமங்களிலிருந்தும் கடலென திரண்டுவந்த கட்சியின் கடைக்கோடி தொண்டர்களுக்கும், இனமான சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சங்கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு மீண்டுமொருமுறை சொல்லுவோம்,
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
மாஞ்சோலை தியாகிகளுக்கு வீரவணக்கம்.
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
புதிய தமிழகத்தின் வீரவணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக