சனி, 2 ஆகஸ்ட், 2014

இலங்கை ராணுவ இணையத்தில் ஜெ.வை பற்றி விமர்சனம்: ஜவாஹிருல்லா, கிருஷ்ணசாமி கண்டனம்..





மீனவர் பிரச்சனை குறித்து ஜெயலலிதா, நரேந்திர மோடி இடையேயான கடித பரிமாற்றம் குறித்து கொச்சைப்படுதும் வகையில் செய்தி வெளியானதற்கு தமிழகத்தில் பல்வேறு கண்டன குரல்கள் எழுந்தன. 

சட்டமன்ற வளாகத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறுகையில், ஒரு முதல் அமைச்சர், நாட்டின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை இலங்கை ராணுவ இணையதளத்தில் தரக்குறைவாக ஒரு தலைப்பிட்டு கட்டுரை வெளிவந்திருக்கிறது. இது கண்டனத்துக்கு உரியது.

இந்த பிரச்சனையை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எழுப்புவதற்கு நாங்கள் முயற்சித்தபோது, சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்றார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், இலங்கை ராணுவ இணையதளத்தில் தமிழ்நாடு அரசுக்கு தலைமை தாங்குபவர்களை பற்றி கொச்சைப்படுத்தக் கூடிய வகையிலும், கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்றும், கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது இல்லை என்பது போல் கருத்துக்களை தெரிவிக்கக் கூடிய வகையில் செய்தியை போட்டுள்ளார்கள். இது தமிழகத்தில் உள்ள மக்களை புண்படுத்தும் அளவிற்கு உள்ளது என்றார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக