சனி, 13 செப்டம்பர், 2014

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: கண்காணிப்பு பணியில் 3 ஆளில்லா குட்டி விமானங்கள்...


பரமக்குடியில் நடைபெ றும் இமானுவேல் சேக ரன் நினைவு தினத்தை யொட்டி கண்காணிப்பு பணியில் 3 ஆளில்லா குட்டி விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆளில்லா விமானங்கள்

பரமக்குடியில் இமானு வேல் சேகரன் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் செப் டம்பர் 11-ந்தேதி கடைபிடிக் கப்பட்டு வருகிறது. இதே போல இந்த ஆண்டும் இமா னுவேல் சேகரன் நினைவு தினம் இன்று (வியாழக்கி ழமை) கொண்டாடப்படுகி றது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்க ளுக்கு சில விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம், போலீஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர். 40 இடங்களில் கண்கா ணிப்பு கேமி ராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. இதில் பதி வாகும் காட்சிகள் நகர் போலீஸ் நிலையத்தில் அமைக் கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்யப் படும்.

மேலும் அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங் களை கண்காணிக்க சென்னை அண்ணா பல்க லைக்கழகத்தில் எம்.ஐ.டி. பிரிவு தக்தா குழுவை சேர்ந்த 6 பேர் கொண்டு வந்துள்ள 3 ஆளில்லாத குட்டி விமா னங்கள் பறக்க விடப்பட்டுள் ளது. இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்கா ணிப்பு கேமிரா மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பதிவு செய்யப்படும். இதற் கான சோதனை ஓட்டம் நேற்று காலை பரமக்குடியில் உள்ள ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது. இந்த கண் காணிப்பு சோதனையை சென்னை டெக்னிக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. சாரங்கன் பார்வையிட்டார்.

போலீஸ் குவிப்பு

தொடர்ந்து இந்த 3 ஆளில்லா குட்டி விமானங் கள் நேற்று மாலை முதல் பறக்கவிடப்பட்டு கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறது. சட்டம் ஒழுங்கு ஏ.டி. ஜி.பி. ராஜேந்திரன் ஆலோ சனையின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதட் டமான பகுதிகளிலும், முக்கிய சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக