திங்கள், 8 செப்டம்பர், 2014

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்: பரமக்குடிக்கு வாகனத்தில் செல்வோர் முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும்

இம்மானுவேல் சேகரனின் 57-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடிக்கு திருச்சி மாநகரத்திலிருந்து வாகனத்தில் செல்ல விரும்புவோர்கள் முறையான அனுமதி பெற்றிருக்கவேண்டும் என மாநகரக் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநகரக் காவல் ஆணையர் சைலேஷ்குமார்யாதவ் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி பரமக்குடிக்கு திருச்சி மாநகரத்திலிருந்து செல்ல விரும்பும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த வாகனத்தில் முறையாக வாகன அனுமதிச்சீட்டு, உதவி ஆணையர் போக்குவரத்து வடக்கு அலுவலகத்தில் பெற்றுச் செல்லவேண்டும் அல்லது பேருந்திலோ புகைவண்டியிலோ பயணம் செய்யலாம்.
வாகன அனுமதிச்சீட்டு முன்புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கவேண்டும். வாகனம் சொந்த வாகனமாக இருக்கவேண்டும்(ஒயிட் போர்டு), விண்ணப்பதாரர் வாகனத்தின் உரிமையாளராக இருக்கவேண்டிய அவசியமில்லை.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும்போது வாகனத்தின் பதிவுச்சான்று(ஆர்.சி புக்) மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் நகல்களை சமர்பிக்கவேண்டும்.உரிமையாளர் உறுதி மொழிச்சான்றில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். காவல்துறை அனுமதிக்கப்பட்ட வழித்தடத்திலேயே சென்று வரவேண்டும் என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக