வியாழன், 30 அக்டோபர், 2014

நெல்லையில் மள்ளர் நாடு அமைப்பினர் ஒருவர் படுகொலை ........

திருநெல்வேலி :நெல்லையில் அடுத்தடுத்து நடந்துள்ள மூன்று கொலைகளாலும் ரோடு மறியல், போலீசார் தடியடி என அடுத்தடுத்த சம்பவங்களால் பதட்டம் நிலவுகிறது.
திருநெல்வேலியை அடுத்துள்ள சீவலப்பேரி, கொமந்தானூரை சேர்ந்தவர் மகேஷ் 28. மள்ளர் மீட்பு கழகம் என்ற கட்சியின் மாவட்ட தலைவராக இருந்தார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். நேற்றுமுன்தினம் மாலையில் அவரை ஒரு தகராறு தொடர்பாக ஒரு தரப்பினர் பேசுவதற்கு அழைத்தனர். மகேஷ், பர்கிட்மாநகர் என்னுமிடத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு பேசுவதாக அழைத்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி அவரது ஆதரவாளர்கள் அங்கு ரோடு மறியலில் ஈடுபட்டனர். அரசு பஸ் மீது கல்வீசி தாக்கினர். அங்கு வந்த போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீவலப்பேரி அருகே மேலப்பாட்டத்தை சேர்ந்த நடராஜன் மகன் மாரிமுத்து 23. நேற்றுமுன்தினம் மாலையில் மகேஷ் கொலைக்கு பிறகு சற்று நேரத்தில், ஒரு கும்பல், மாரிமுத்துவையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என தெரிகிறது. இந்நிலையில் இன்று 29ம் தேதி காலையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில், செல்வராஜ் என்பவரது மகன் சுரேஷ் 30 என்பவரை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குபேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. தகவல் அறிந்ததும் சுரேஷின் உறவினர்கள் அங்கு கூடினர். சுரேஷ் மீது போலீசில் வழக்குகள் இருப்பதாக தெரிகிறது. நெல்லையில் அடுத்தடுத்து ஒரே சமூகத்தை சேர்ந்த மூன்றுபேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக